மலேசியாவில் பாதுகாப்பு பணியாளர்களாக கடமையாற்ற இலங்கையர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகவலை, மலேசியாவின் உள்துறை பிரதியமைச்சர் டட்டுக் நூர் ஜஸ்லான் வெளியிட்டுள்ளார். மலேசியாவில், இதுவரை காலமும் 'கூர்க்காக்கள்' என்ற பெயருக்காக நேபாளிகள் மட்டுமே பாதுகாப்புப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், நேபாளத்திலிருந்து இந்தப் பணிகளுக்கு வருவோரின் தொகை வரையறைக்கு உட்பட்டிருப்பதால், வேறு நாட்டவர்களுக்கும் இதனை விஸ்தரிக்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையில் இருப்பதைப்போன்று இராணுவ அடிப்படையை கொண்டவர்களாக இருப்பதை தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.