Monday, July 6, 2015

கொதித்தாறிய நீரை மீண்டும் கொதிக்கவைக்க வேண்டாம்.

தேநீர் செய்ய ஒரு கெண்டி நீரை அடுப்பில் கொதிக்க வைக்கிறீர்கள். பின் அதனை அணைத்து விடுகிறீர்கள். மேலும் வேறு ஒரு விஷயத்தால் உங்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது. தேநீர் வேண்டும் என்று நீங்கள் மீண்டும் நினைக்கும் போது அந்த நீர் ஆறிப் போயிருக்கும். எனவே நீங்கள் மீண்டும் அந்த நீரை கொதிக்க வைப்பீர்கள். மீண்டும் இது நடக்கும். நிறுத்துங்கள்! அதே நீரை மீண்டும் கொதிக்க வைக்க வேண்டாம். இதை நீங்கள் ஏற்கனவே செய்திருந்தால், அதனை மாற்ற கால தாமதம் ஆகிவிட்டது. ஆனால் எதிர்காலத்தில் இதை எப்போதும் செய்யாதீர்கள். மீண்டும் கொதிக்க வைக்கும் நீர் மிகவும் ஆபத்தானதாகும். ஏன்? ஏனெனில் நீரின் இரசாயன கூட்டமைப்பு கொதிக்க வைக்கும் போது மாறிவிடும். நீரைக் கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து வரும் நீராவியை நீங்கள் எப்படி உங்கள் கண்களால் பார்க்க முடிகிறது என்று தெரியுமா? நீரில் உள்ள ஆவியாகும் சேர்மங்கள் நீரை கொதிக்க வைக்கும் போது ஆவியாக மாறி நீராவியாக அதனை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் நீரை ஆற வைக்கும் போது அதிலுள்ள கலைக்கப்பட்ட ஆவியான வாயுக்கள் மற்றும் கனிமங்கள் மீண்டும் அதிலேயே படிகின்றன. வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! நீங்கள் நீரை மறுபடியும் கொதிக்க வைக்கும் போது அதிலுள்ள இரசாயன சேர்மங்கள் மீண்டும் மாற்றம் அடையும். அது தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். நீரை மீண்டும் கொதிக்க வைக்கும் போது, நீரில் உள்ள ஆபத்தான கூறுகள் அதனை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக நீரிலேயே சேமிக்கப்பட்டு விடும்.