Sunday, June 7, 2015

தானாக பற்றி எரியும் மனித உடல்கள்.

உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் தானாக தீ பற்றி எரிந்து சாம்பலாகி விடுவதாக நம்பப்படும் நிகழ்வு Spontaneous Human Combustion என்று அழைக்கப்படுகிறது.
இந்த வினோத நிகழ்வு வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை செவிவழிச் செய்திகளாகவே இருந்துள்ளன.
வியட்னாம் போரில் பணிபுரிந்த போர் வீரர் Frank Baker என்பவர் வாழ்விலும் அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மேலும், இவர் தானாக தீ பற்றி எரிய தொடங்கியும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அவர் 1985ம் ஆண்டு யூன் மாதத்தில் ஒரு நாள், அவரது நண்பர் Pete Willey என்பவருடன் மீண் பிடிக்க செல்ல திட்டமிட்டுள்ளார்.
அதற்காக அவர் தயார் ஆகி சோஃபா ஒன்றில் அமர்ந்திருக்கையில் அவரது உடலில் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
தன் உடலில் தீ பற்றி எரிவதை சில வினாடிகளில் உணர்ந்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதிஷ்டவசமாக நெருப்பு உடல் முழுவதும் பரவுவதற்கு முன் அணைக்கப்பட்டதால் அவர் தப்பித்துள்ளார்.
1984ம் ஆண்டு விஞ்ஞானிகள் சிலர் தானாக தீப்பற்றி எரிவது பற்றி நடத்திய ஆய்வின் முடிவில், அவ்வாறு தீப்பற்றி எரிந்து இறந்தவர்கள் அனைவரும் தீயின் அருகில் இருந்ததாகவும், தீப்பற்றும் ஆடைகளை அணிந்திருந்ததாகவும் மேலும் உடலின் அதீத கொளுப்பினாலும் இறந்ததாக முடிவுக்கு வந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் தானாக உடல் தீப்பற்றி எரிதல் குறித்து பல கதைகள் கூறப்பட்டாலும் இதற்கான உண்மையான அறிவியல் விடை இன்னும் தீராத மர்மங்களில் ஒன்றாகவே இருக்கிறது!

http://www.livescience.com/42080-spontaneous-human-combustion.html