Wednesday, June 17, 2015

டூத் பேஸ்ட் இல்லாமல் பல் துலக்கும் தூரிகை அறிமுகம் - ஜப்பான்

காலையிலேயே அரை தூக்கத்துல எழுந்து, பேஸ்ட் வைக்காமலேயே வெறும் பிரஷ் எடுத்து பல்லு விலக்கி, எத்தனை முறை, நம்மில் எத்தனை பேரு பல்ப் வாங்கி அசிங்கப்பட்டு இருப்போம். இனிமே அப்பிடி அசிங்கப்படவே வேணாம்ப்பா, ஏன்னா... இனிமே பேஸ்ட் தேவைப்படாது, மிசோக்கா டூத்-பிரஷ் மட்டும் போதும்.

மிசோக்கா - ஒரு நானோடெக் டூத் பிரஷ், இது பேஸ்ட் இல்லாமலேயே பற்களை சுத்தம் செய்யும். இந்த பிரஷின் முட்கள் தண்ணீரில் அசையக்கூடிய நானோஐஸ்டு மினரல் ஐயன்ஸ் மூலம் பூசப்பட்டுள்ளது.

நானோஐஸ்டு மினரல் ஐயன்ஸ் பற்க்களின் இடையே கடந்து செல்லும் அதனால், இதற்கு பற்களின் அழுக்குகளை சுத்தம் செய்து வெண்மையாக்க, டூத்-பேஸ்ட் தேவையே இல்லை. பிரஷை ஒரு கிளாஸ் தண்ணீரில் மூழ்கி எடுத்து, பல் துலக்கிவிட்டு, பின் மறுபடியும் பிரஷை தண்ணீரில் மூழ்கி எடுத்துவிட்டு, வாய் கொப்பளித்தால் போதும், பிரஷிங் ஓவர்..!

மாதத்திற்க்கு ஒருமுறை இந்த பிரஷை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுநாள் வரை பேஸ்ட்டை மறந்தது போல, பிரஷை மாற்றுவதையும் நாம் மறந்து விடக்கூடாது என்றுதான், இதற்கு மிசோக்கா என்று பெயர் வைத்துள்ளனர், அதாவது மாதத்தின் கடைசி நாள் என்று அர்த்தம். ஜப்பான் மூளை ஜப்பான் மூளைதான்ய்யா..!