Friday, June 5, 2015

அமெரிக்க அரசாங்க தகவல்களில் நுழைந்த ஹக்கர்கள்

அமெரிக்க அரசாங்க தகவல்களில் நுழைந்த ஹக்கர்கள்
அமெரிக்க அரசாங்க பாதுகாப்பு தரவுகளில் அத்துமீறி நுழைந்த கணினி ஹக்கர்கள் தொடர்பில் சீன ஹக்கர்களை குற்றஞ்சாட்டியமை பொறுப்பற்றது என்று சீனா கூறியுள்ளது.
சைபர் தாக்குதல் எனப்படும், கணினி வலையமைப்பில் அத்துமீறி நுழைவது குறித்து முழுமையான புலன்விசாரணை நடத்தாது, ஒருவர் மீது சுட்டுவிரலை நீட்டி குற்றஞ்சாட்டுவது விஞ்ஞானத்துக்கு முரணானது என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்க அரசாங்க பணியாளர்கள் 40 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகவும், அடையாள மோசடிக்கான ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இது குறித்து எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
நன்றி : பிபிசி 
http://edition.cnn.com/2015/06/04/politics/federal-agency-hacked-personnel-management/