Wednesday, November 9, 2011

Bodhidharma - The Master of Zen [達摩 - 禪宗大師] போதி தருமன் - (படம் முழுமையாக இணைப்பு)

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார்.
இவரது வாழ்க்கையைப் பற்றி குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலை உள்ளன. இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது.அவர் பாரசீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.
புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.