குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.
உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.
இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.