Thursday, November 17, 2011

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு: 5 ஆண்டுகளில் பயன்பாடு


புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர்.


கேஜி5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் என்று நேச்சுரல் மெடிசின் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மாத்திரை வடிவில் வரவிருக்கும் இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த மருந்தால் மிகக் குறைந்த பின் விளைவுகள் தான் ஏற்படுமாம்.
இது குறித்து மூத்த விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் சிரேஷ் கூறியதாவது,

இந்த மருந்து புற்றுநோய் செல்களை பெருக விடாது. அதனால் அந்த செல்கள் தற்கொலை செய்துகொள்ளும். கணையம், மார்பகம் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்களை குணப்படுத்தும் இந்த மருந்து சில கொடிய கட்டிகளையும் அழிக்கும் திறன் கொண்டது என்றார்.