சுற்றுலா செல்வதென்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அதிக ஆர்வம் காட்டுவர்.அதிலும் மேலைத்தேய நாட்டவர்களுக்கு சுற்றுலா செல்வதில் அலாதி பரிரியம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு அண்டும் அல்லது ஒவ்வாரு காலநிலைக்கு ஏற்றாட் போல், விடுமுறைகளுக்கு ஏற்றாட் போல் நமது சுற்றுலாப் பயணங்கள் அமைவதுண்டு.
வீட்டில் அடிப்படைத் தேவைகளுக்கு பணத்தை ஒதுக்குவதைப் போல் சுற்றுலாவுக்கும் ஆண்டின் ஆரம்ப காலப் பகுதியிலேயே பணத்தை ஒதுக்கி திட்டமிட்டுக் கொள்பவர்களும் நம்மில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
அவ்வாறாக வரும் ஆண்டிற்கான சுற்றுலாப் பயணங்களிற்கு சிறந்த 10 இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன. அவை வரமாறு,
- இங்கிலாந்தின் லண்டன்
2012ஆம் ஆண்டிற்காக சுற்றுலா செல்லக் கூடிய சிறந்த இடங்களில் முதலாவது இடத்தை இங்கிலாந்தில் லண்டன் நகரம் தெரிவு பெற்றிருக்கிறது.
- ஓமானின் மஸ்கட் நகரம்
அடுத்து ஓமானின் மஸ்கட் நகரம் சிறந்த சுற்றுலாவுக்குரிய இடமாக கருதப்படுகிறது. இங்கே காணப்படும் இயற்கை காட்சிகள், புதைபொருள் ஆராய்ச்சி நிலையம் உட்பட பொழுது போக்கிற்கான மலைகள், நீர் நிலைகள் என்பன சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடியனவாக இருக்கின்றன.
- இந்தியாவின் பெங்கலூர்
இந்தியாவின் பெங்கலூர் சிறந்த சுற்றுலா தளமாக இருக்குமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே அழகிய தோட்டங்கள் பல கலாச்சாரங்கள் என்பன சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக இருக்கலாமென கருதப்படுகிறது.
- இஸ்பெயினின் காடிஸ்
அமெரிக்காவின் கலாச்சாரத்தைக் கொண்ட நகரம் என இதனை வர்ணிக்கப்டுகிறது. முதல் தடவையாக ஐரோப்பிய நகரமொன்று இந்தப் பெருமையை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களுடைய மொழி தெரியாவிட்டாலும் அவர்களைப் போன்ற உடை அணிவித்து நாட்களைக் களிப்புடன் உறவாடி மகிழ்வர்.
- சுவிடன் இஸ்டொக்ஹோம்
எப்பொழுதும் பொழிவுடன் இருக்கும் நகரமாக இது விளங்குகிறது. உரோமாவிக் வெனிஸ் நகரத்தைப் போன்று அழகிய தோற்றத்தை உடையதாக காணப்படுகிறது.
- போத்துக்கல் கியுமரீஸ்
ஐரோப்பிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த நகரம் மிகவும் கவர்ச்சியுள்ளதாக காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் அழகிய கட்டிடங்களையும், சுற்றாடலையும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தவருடத்தில் இந்த நகரம் பல்வேறு கலை அம்சங்களை நெறிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது என சுற்றுலாச் சபையினர் தெரிவிக்கின்றனர்.- சிலி சண்டியாகோ
இங்கே ஐரோப்பாவிலே அதி உயரமான கட்டிடம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. புதிதாக திறந்து வைக்கப்பட்ட நூதன சாலை ஒன்று விமர்சையாக விளங்குகிறது.
கோப்பி உற்பத்தியில் சிறந்து விளங்கும் சிலி சன்டியாஸ்கோவில் பல கோப்பி சாலைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.- சீனா ஹொங்கொங்
சனத்தொகையில் செரிந்து இருக்கும் இந்நகரம் காதுக்கினிய சங்கீதங்களை ஒலித்துக் கொண்டு இருக்கும். அழகிய சுற்றாடலைக் கொண்டிருக்கிறது.
- அமெரிக்காவின் ஓலாண்டோ
இங்கு 61வது உலக பாஸ்கட் போட்டி நடைபெற இருக்கிறது, சங்கீத நிகழ்ச்சிகள் என்பனவும் இடைபெற இருக்கிறது. இரவு வேலைகளில் நடைபெறும் இவ்விளையாட்டு நிகழ்ச்சிகளை உள்நாட்டினரும் சுற்றுலாப் பயணிகளும் கண்டு களிப்பர்.
- அவுஸ்த்திரேலியாவின் டார்வின்
வட அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த நகரம் இயற்கை அழகுகளைக் கொண்டதாக கருதப்படுகிறது. இயற்கைக காட்சிகளையும் உஷ்ண வலயத்துக்குப் பொருத்தமான விலங்குகள் பல இங்கு காணப்படுகின்றன. முதலைக்கு பெயர்போன நகரமாக திகழ்கிறது.
பல சந்தைகளும் சிற்றுண்டிச் சாலைகளும் சுற்றுலாப்பயணிகளின் மனதைக் கவரக் கூடியதாக இருக்குமென தெரிவிக்கின்றனர்.