Wednesday, November 23, 2011

15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்: புது வித பற்றரி கண்டுபிடிப்பு

வெறும் 15ம் நிமிடம் மட்டுமே சார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடிய கைபேசி பற்றரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
குறைந்த நேரம் சார்ஜ் செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய பற்றரி தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் பற்றரியை கண்டுபிடித்தனர்.
இது தற்போது நடைமுறையில் உள்ள செல்போன் பற்றரி தொழில்நுட்பத்தைவிட 10 மடங்கு சக்திவாய்த்தது. இதை தொடர்ந்து எலக்ட்ரிக் கார் மற்றும் பல பயன்பாட்டுக்கான சக்தி வாய்ந்த பற்றரிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வகை பற்றரிகள் அடுத்த 3 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.