Sunday, January 30, 2011

டிஜிட்டல் வாலட்கள் (Digital Wallet).

பெரிய பிஸினஸ் டீல்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பவை டிஜிட்டல் வாலட்கள் (Digital Wallet).
கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்வது வேகமானதாகவும் பாதுகாப் பானதாகவும் இருந்தாலும், நடுவில் ஏதாவது கோளாறு நடந்தால் நம் காரியம் கெட்டுவிடும்.
 இந்தத் தொழில்நுட்பத்தையே டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று நினைத்தார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரெட்ரிக் பாம்பிளாட். டிஜிட்டல் வாலட் என்னும் நவீன மெஷினைக் கண்டுபிடித்தார்.  வேகமான, பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைக்கு உதவியாக இருப்பதால், இன்று மிகப் பெரிய பிஸினஸ் டீல்களுக்கு டிஜிட்டல் வாலட்தான் சிறந்த நண்பன்.
அப்படி என்ன செய்கிறான் இந்த டிஜிட்டல் நண்பன்?
இரண்டு பேர் பணத்தை பரிமாறிக் கொள்ளப் போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு பணம் யாருக்கு கொடுக்கப் படுகிறது என்பதை முன்கூட்டியே இன்டர்நெட்டில் குறித்துக்கொண்டு, பணம் கொடுப்பவர், வாங்குபவர் தங்களின்  டிஜிட்டல் வாலட்டுகளை படத்தில் உள்ளவாறு இணைத்துக் கொள்ள வேண்டும். பணம் கொடுப்பவர் தனது கைரேகையை அந்த வாலட்டின் மேல் உள்ள டிஸ்ப்ளேயில் வைக்க இருவரின் அக்கவுன்டுகளிலும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பாக முடிந்துவிடும்.  அட, ஆச்சரியமாத்தான் இருக்கு!