ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவின் ஒரு தெருவில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுடன் பெண் ஒருவர் நடந்து வந்துள்ளார். பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கி நிறுத்தியுள்ளனர். அப்போது, திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டியுள்ளார்.
‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்க செய்வேன்’ என மிரட்டியதால் போலீசார் பயந்து விலகி ஓடியுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு, கையில் குழந்தையின் தலையை பிடித்தப்படி அங்கும் இங்கும் நடந்துச்சென்றுள்ளார். மறைந்திருந்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்தனர்.
பின்னர், பெண்ணின் இருப்பிடத்திற்கு சென்றபோது அவரது வீடு தீப்பற்றி எரிந்துக்கொண்டு இருந்துள்ளது. தீயை அணைத்துவிட்டு உள்ளே சோதனை செய்தபோது, தலையில்லாத அந்த குழந்தையின் உடலை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்.
அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எப்ண்ணின் பெயர் ஜியுல்சிஹிரா போபாகுலோவா (வயது 38) அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
‘மத்திய ஆசியாவில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டில் எனது கணவருடன் வசித்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்னாள் இங்கு மாஸ்கோவில் பணிப்பெண்ணாக வேலை கிடைக்க கணவரை விட்டுவிட்டு மாஸ்கோவில் குடியேறினேன்.
இங்கு நாஸ்டியா மெச்செரியகோவா என்ற 4 வயது குழந்தையை பராமரிக்க என்னை பணிப்பெண்ணாக பெற்றோர்கள் நியமித்தனர். 4 வயது குழந்தைக்கு மனநலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது.
எனது தாய்நாட்டில் உள்ள எனது கணவர் மற்றொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டதாக எனக்கு தகவல் வந்தது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும், ‘என்னை இரண்டாவது மனைவியாக இருக்குமாறு எனது கணவர் கூறியதும் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதே கோபத்துடன் வேலை செய்யும் வீட்டிற்கு சென்றபோது, என் மூளைக்குள் வினோதமான ஒலிகள் எழுந்தது. என கூறி உள்ளார்.