Saturday, January 31, 2015

வயதான தோற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு ?

பெரும்பாலும் அனைவரும் என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றே கருதுவதுண்டு.
ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாததால் தேவையில்லாமல் நோய்கள் வந்து துன்பப்பட வேண்டியுள்ளது.
ஒருசில உணவுகள் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை பெற வழிவகுக்கின்றன.

அதனை தினமும் அதிகளவு சாப்பிடாமல் இருப்பதன் மூலம் கொழுப்புகள் சேர்வது தவிர்க்கப்பட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.
சர்க்கரை
இனிப்பு பொருளான சர்க்கரையை விரும்பாத நபர்களே இல்லை எனலாம், ஆனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகமானால் வயதான நபர் போன்ற தோற்றம் எளிதில் வந்துவிடும்.
இதேபோன்று செயற்கை இனிப்புகளை சாப்பிட்டால், விரைவில் வயதான நபர் போன்ற தோற்றம் வந்துவிடும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆல்கஹால்
ஆல்கஹால் குடிப்பதே ஆபத்தான ஒன்று தான். ஆரோக்கியமாக, இளமையாக இருக்க நினைத்தால் முடிந்தவரையிலும் ஆல்கஹால் பருகுவதை தவிர்த்து விடுங்கள்.
இதேபோன்று காப்ஃபைன் நிறைந்த பானங்களையும் அளவோடு குடித்து வந்தால் வளமாக வாழலாம்.
உப்பு
என்னதான் உப்பு உணவின் சுவையை அதிகரித்து கொடுத்தாலும், அளவும் மிஞ்சும் பட்சத்தில் ஆபத்தை விளைவித்து விடும்.
அத்துடன் முதுமைத் தோற்றத்திற்கும் வழிவகுக்கும்.
சாச்சுரேட்டட் கொழுப்புக்கள்
உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியவை சாச்சுரேட்டட் கொழுப்புக்கள்.
இதனை அதிகளவில் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, வயதான தோற்றத்தையும் விரைவில் வெளிப்பட வழிவகுக்கும்.
பாஸ்ட் புட்
இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாஸ்ட் புட்டுக்கு அடிமையாகி கொண்டிருக்கின்றனர்.
என்னதான் நாவிற்கு சுவை தந்தாலும், எப்போதாவது சாப்பிட்டால் ஆபத்து இல்லை.
ஆனால் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, முதுமை தோற்றத்தையும் ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
உணவுகள் நீண்டநாள் கெடாமல் இருக்க கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.
இதனை சாப்பிட்டால் கெமிக்கல்கள் உடலை தாக்கி, உடல் பருமன் மற்றும் இதர பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் பருமனடைந்தால், அது தானாக முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும்.