Sunday, June 1, 2014

மனிதனுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் குடியேறும் கிருமிகள்

மனிதனுக்கு முன்பே நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்தை  சென்றடையும் வாய்ப்புகள் உள்ளதாக  'நாசா' எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவது தொடர்பில் அமெரிக்காவிலுள்ள 'நாசா' ஆய்வு நிலையம் 'கியூரியாசிட்டி' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.


மனிதனுக்கு  முன்னதாக பூமியில் இருந்து நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று குடியேறும் வாய்ப்பு உள்ளதுடன் இந்த நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் விண்கலன்களில் பரவி அதன் மூலம் அங்கு சென்றடையும் என அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செவ்வாய் கிரகத்தில நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப நிலை நிலவுவதாக நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

அப்படின்னா மனிதனுக்கு முன்பே நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்தில் குடியேறி அயல் கிரகவாசி என்ற பெருமையை பெறப்போகிறது என்று சொல்லுங்க...!