Thursday, November 10, 2011

பேஸ்புக்கில் புதிய வைரஸ் – Alert News



நாளுக்கு நாள் பேஸ்புக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதற்கேற்றாற்போல் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கினுள் புகுந்து தகவல்களை திருடும் வேலைகளும் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளன.
இப்போது புதுவிதமாக கருத்தைக் கவரும் செய்திகளுடன் பல இணைப்புக்கள் வருகின்றன. இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆரம்பத்திலேயே இவ்வாறான Spam இணைப்புக்கள் வந்தபோதும், தற்போது பேஸ்புக் தனது பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கிய பின்பு ஓரளவு குறைந்திருந்தன.
மறுபடியும் இப்போது முன்னரைப்போல இந்த Spam இணைப்புகள் எல்லோர் கணக்கிற்கும் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் இப்போது புதிதாக வந்திருக்கிறது ஓர் Spam இணைப்பு.
“SICK I Just Hate Rihana after Watshing this video” என்ற ஓர் செய்தியுடன் ஓர் இணைப்பு எல்லோர் கணக்கிற்கும் வருகிறது.
 
 
ஆபாச இணைப்பு போல் தோன்றும் இந்த இணைப்பை கிளிக் செய்தால் ஒரு பக்கத்திற்கு (Fan Page) செல்கிறது. நீங்கள் அந்த பக்கத்தை Like பண்ணினால்தான் அந்த வீடியோவை பார்க்கமுடியும் என்று சொல்கிறது.  ஆனால் நீங்கள் Like பண்ணினால் அங்கே எந்த வீடியோ இணைப்பும் காணப்படமாட்டாது.
மாறாக உங்கள் கணக்கு தொடர்பான தகவல்கள் முழுவதும் திரட்டப்படுகிறது. சிலவேளைகளில் உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயங்களும் உள்ளன.
அத்துடன் நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் உங்கள் நண்பர்களின் Wall இல் உங்கள் பெயருடன் பதியப்படுகின்றன. உங்கள் நண்பர்களும் நீங்கள்தான் பகிர்ந்துகொண்டதாக கருதி அந்த இணைப்பை கிளிக் செய்வார்கள்.  அதனால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே இவ்வாறான இணைப்புக்கள் வரும்போது அது பற்றி பேஸ்புக் குழுமத்திற்கு Report செய்துவிட்டு அந்த இணைப்புக்களை நீக்கிவிடுவது நல்லது