Friday, October 7, 2011

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் காலமானார் (வீடியோ இணைப்பு)

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56) மரணமடைந்தார். புற்று‌நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நியூயோர்க் நகரில் மரணமடைந்தார்.
அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது.
இன்றைய நவீன கணணி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம்.
ஐபேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் விளங்குவது ஆப்பிள் நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உலக தலைவர்கள் இரங்கல்
அவருக்கு சர்வதேச தலைவர்கள் மற்றும் முன்னணி கணணி தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஒபாமா: அமெரிக்காவில் புதிய படைப்புகளை உருவாக்கி உலகில் சாதனை படைத்தவர்களில் ஸ்டீவ் ஜாப்ஸூம் ஒருவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தை துவங்கி இந்த உலகிற்கு மகத்தான சேவை செய்து நம்‌மை விட்டு பிரிந்து விட்டார். மனித வரலாற்றில் அரிய சாதனை ப‌டைத்துள்ளார். மிகவும் அசாதாரணமான ஒரு மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது என்றார்.
ஜூலியா கிலார்ட்: தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவரது படைப்புகள் உலகில் சிறந்த சேவை ஆகும்.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்நத இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் தெரிவித்தார்.
நல்ல நண்பனை இழந்துவிட்டேன்: பில்கேட்ஸ் இரங்கல்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு பில்கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் அவதியுற்ற ஸ்டீவ் ஜாப்ஸ்(56) இறந்தார். கணணி உலகில் புதிய சாதனை படைத்தவர். ஐபோன், ஐபேடு என நவீன கணணி தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார்.
இந்நி‌லையில் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர் பில்கேட்ஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஸ்டீவ் ஜாப்ஸூடன் இணைந்து பணியாற்றி அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். நவீன கணணி புரட்சியினை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை இந்த உலகம் இழந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அ‌வரை முதன்முதலாக சந்தி்‌த்தேன். அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்களாகினோம். ஒரு நல்ல நண்ப‌ரை இழந்துவிட்டேன்” என்றார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்: கணணி உலகில் புரட்சியை ஏற்படுத்தி உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரை இந்த கணணி உலகம் இழந்துவிட்டது என சமூக இணையதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறினார்.
அர்னால்டு இரங்கல்: கலிபோர்னியா மக்களின் கனவை நனவாக்கி தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார். கணணி உலகின் முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் என கலிபோர்னியா மாகாண கவர்னரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்டுஸ்வாஸ்னேக்கர் டுவிட்டர் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.