Saturday, January 8, 2011

பகல் கனவு’ காணும் குழந்தைகள்

வளர்ந்த மனிதர்களைப் போல குழந்தைகளும் பகலில் கனவு காண்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் `எம்.ஆர்.சி. கிளினிக்கல் சயன்சஸ் சென்டர்’ ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
அப்போது, நடந்தவற்றை யோசித்து மீளாய்வது செய்வது மற்றும் விழிப்பு உணர்வுக்கான மூளைப் பகுதிகள், பிறந்த குழந்தைக்கு முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மூளையின் செயல்பாடு, வளர்ச்சி குறித்த தற்போதைய கருத்துகளுக்குச் சவாலாகத் திகழ்கிறது புதிய கண்டுபிடிப்பு. இம்பீரியல் கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 29 வாரங்கள் முதல் 43 வாரங்கள் வரையிலான 70 குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களின் `மூளை ஓய்வுநிலை வலைப் பின்னல் அமைப்பு’ எவ்வாறு இருக்கிறது என்று `எம்.ஆர்.ஐ. ஸ்கேன்’ எடுத்துப் பார்க்கப்பட்டது. இந்த ஓய்வுநிலை வலைப்பின்னல் அமைப்பானது ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்தாதபோதும் அல்லது தூக்கத்தின்போதும் செயல்பாட்டு நிலையில் உள்ள நிரான்களின் இணைப்பாகும்.

கருவில் உள்ள சிசுவானது பிறக்கும் நிலையை எட்டும்போது, இந்த வலைப்பின்னல் அமைப்பு, பெரியவர்களுக்கு உள்ளதைப் போல முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறது. இந்த வலைப்பின்னல் அமைப்புகளில் ஒன்றான `டீபால்ட் மோட் நெட்வொர்க்’, நடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பது, பகல் கனவு காண்பது ஆகியவற்றில் தொடர்புடையதாக இருக்கிறது.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யாதபோது மேற்கண்ட நெட்வொர்க்கானது `ஆக்டிவ்’ ஆகவும், ஒரு பணியில் கவனமாக ஈடுபடும்போது குறைவான `ஆக்டிவ்’ உடனும் இருப்பதை எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குழந்தைகள் தூங்கும்போது இந்த `நெட்வொர்க்’, செயல்பாட்டில் இருக்கிறது. ஆய்வுக் குழுவின் முக்கிய உறுப்பினரான பேராசிரியர் டேவிட் எட்வர்ட்ஸ், குழந்தைகளின் மூளைச் செயல்பாடு குறித்த முந்தைய கருத்துகளை எங்களின் கண்டுபிடிப்புகள் நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றன என்கிறார்