Saturday, January 29, 2011

உலகிலேயே மிக கொடிய ஒரு விரல் டைனோசர்.

சீனாவை சேர்ந்த விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள், மைக்கேல் பிட்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சிறிய ஒரு விரல் டைனோசரை அடையாளம் கண்டுள்ளனர். மிகவும் அரிய வகையான இந்த புதிய உயிரினம் உலகிலேயே மிக கொடிய, ஒரு விரல் கொண்ட ஒரே உயிரினமான டி ரெக்ஸ் டைனோசர் இனத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்:

புதிய டைனோசருக்கு ஒரு விரல் மட்டுமே உள்ளது. இது தெரோபாட் இனத்தை சேர்ந்த லின்ஹெனிகஸ் மோனோடாகிலஸ் வகை உயிரினம். ஒரு மீட்டர் உயரத்துடன் காணப்படும் இது, அதிக பட்சமாக பச்சைக்கிளியின் எடையளவு உள்ளது. புலால் உண்ணும் வகையை சேர்ந்த பண்டைய தெரோபாட்களின் பரிணாம வளர்ச்சிதான் தற்போது பறவையாக உள்ளது. இவற்றின் ஒவ்வொரு கைகளிலும் தலா 3 விரல்கள் இருக்கும்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரினத்துக்கு ஒரே ஒரு விரல் மட்டும் பெரிய அளவில் உள்ளது. அதிலுள்ள நகத்தால் பூச்சிகளின் கூடுகளை கிளறி சிறிய புழுக்களை உணவாகக் உட்கொள்ளும். மிகக் குறைந்த உயரத்துக்கு பறக்கும் தன்மை இதற்கு இருந்திருக்க வேண்டும்.

பறக்க இயலாத பண்டைய தெரோபாட்கள் 5 விரல்களை உடையவை. கால மாற்றத்தில் இதிலும் மாற்றம் ஏற்பட்டு தற்போது இந்த வகைகளுக்கு 3 விரல்கள் உள்ளன. இத்தகைய உயிரினங்கள் பெரும்பாலும் அழிந்து விட்டதாகவே கருதப்பட்டு வரும் நிலையில், புதிய டைனோசர் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தொடர் ஆராய்ச்சியில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும்.