பூமியில் உயிர் வாழ்வதுபோலவே விண்ணிலும் மனிதர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வது சாத்தியமே. அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள். மனிதன் உயிர் வாழ தேவையான சூழ்நிலை விண்ணில் பெருமளவில் உள்ளதால் இத்தகைய முயற்சி விரைவில் சாத்தியமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் டேனியல் கிளாவின் தலைமையில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் விண்ணில் மனிதன் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு: பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை, அமினோஆசிட் என்ற ஒரு வகை அமிலத்தால் சாத்தியமாகிறது.
விண்ணில் உள்ள சில கிரகங்களிலும் இத்தகைய அமிலம் இருப்பதற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. மனித உயிருக்கு தேவைப்படும் அமினோ ஆசிட்டில் லெப்ட் மற்றும் ரைட் ஹேண்டட் என 2 வகைகள் உள்ளன. இதில் லெப்ட் ஹேண்டட் அமினோ ஆசிட்தான் இயற்கையில் அதிகம் உள்ளது. மனிதனுக்கு அத்தியாவசியமானதும் இதுவே.
2009 ல் க்ரீன் பெல்ட் பகுதியில் இயங்கி வரும் நாசாவின் காடார்ட் ஸ்பேஸ் ப்ளைட் மையம், விண்கற்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், கார்பன் அதிகம் கொண்ட லெப்ட் ஹேண்டட் அமினோ அமிலங்கள் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், விண்ணில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கற்களில் எல்-ஐசோவேலைன் என்ற மூலப்பொருளின் கலப்பும் உள்ளதால் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. விண்கற்கள் மற்றும் எரிநட்சத்திரங்கள் மூலம் பூமியில் இருந்து விண்ணுக்கும் அங்கிருந்து பூமிக்கும் அமினோஆசிட் பரிமாற்றம் சாத்தியமாகி இருக்க வேண்டும்.
தற்போதைய எரிகற்களை பண்டைய எரிகற்களுடன் ஒப்பிட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவற்றில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யும் எல்-ஐசோவேலைன் மூலப்பொருள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரிய வெப்பத்தை அடிப்படையாக கொண்டே லெப்ட் ஹேன்டட் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இத்தகைய சூழலில் ரைட் ஹேண்டட் அமினோ அமில வகைகள் தானாக அழிந்து விடும்.
விண்ணில் லெப்ட் ஹேன்டட் அமினோ அமிலங்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக உள்ளது. தண்ணீர், சூரிய ஒளி எல்லாம் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், விண்ணில் மனிதன் குடியேறும் சூழ்நிலை தென்படுகிறது.