1) கூகுள் குரோம் 8 வெளியீடு
கூகுள் குரோம் இயங்குதளத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பாக இது வெளியாகியுள்ளது. வெப்ஸோர் உதவி, பி.டி.எப் விவ்வர் என்பன இதன் விசேட வசதிகளாகும்.
Download Chrome here.
2) தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டுக்காக கூகுளின் 250,000 அமெரிக்க டொலர் நன்கொடை
சமூகத்தினிடையே தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான பயிற்சியை வழங்கும் iGotITtoo என்ற நிறுவனதிற்கு கூகுள் 250,000 $ நன்கொடையாக வழங்கியிருந்தது.
3)கூகுள் ஏர்த் 6 வெளியீடு
இணையத்தின் ஊடாக உங்களை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும் கூகுள் ஏர்த் சேவையின் 6 ஆவது பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மிகத்துள்ளியமான முப்பரிமாண படங்கள் மற்றும் மரங்களைக் கூட முப்பரிமாணத்தில் காணக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
4) குளோனிங் முறையில் 4 புதிய டோலி ஆடுகள்
முதல் டோலி ஆட்டின் உயிரணுவில் இருந்தும், அதன் பால்மடி திசுக்களிலும் இருந்தும் மேலும் 4 டோலி ஆடுகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
1996ஆம் ஆண்டு 'குளோனிங்' முறைப்படி 'டோலி' என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து மேலும் 4 டோலி செம்மறி ஆடுகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றை இங்கிலாந்தில் நோட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானி கீத் கெம்பெல் உருவாக்கியுள்ளார்.
நமது பூமியிலிருந்து 40 ஒளி வருட தூரத்தில், பூமியை விட 2.6 மடங்கு பெரிதான கோல் ஒன்றினை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது GJ 1214b எனப் பெயரிடப்பட்டுள்ளது.
6) ஜோர்ஜ் டபிள்யூ மற்றும் ஷூக்கர் பேர்க் சந்திப்பு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் பேஸ்புக் ஸ்தாபகர் ஷூக்கர் பேர்க் ஆகியோர் அண்மையில் பேஸ்புக் தலைமையகத்தில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். இதன் போது பேஸ்புக் பாவனை பற்றிய சுவையான சம்பாஷனை ஒன்றும் இவர்கள் இடையே இடம்பெற்றது.