Thursday, December 30, 2010

2094ம் ஆண்டு வரை சந்திர கிரகணம் நிகழாது

சூரியனிடம் இருந்து நிலாவுக்கு செல்லும் ஒளிக்கதிர்களை பூமி மறைக்கும் சந்திர கிரகணம் 372 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. இதுபோன்ற சந்திர கிரகணம் 372 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் தோன்றியது.

தற்போதும் கடுமையான குளிர் காலத்தில் இந்த கிரகணம் நடந்தது.
2094ம் ஆண்டு வரை இதுபோன்ற சந்திர கிரகணம் நிகழாது. இந்த சந்திர கிரகணத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் நிலாவின் மீது விழாது. பூமி மறைத்து கொள்ளும். கிழக்கு நேரப்படி செவ்வாய்க் கிழமை (21ம் திகதி) அதிகாலை 2.40 மணியில் இருந்து, 3.53 மணி வரை முழு சந்திர கிரகணம் தெரிந்தது.

சுமார் 72 நிமிடங்கள் நீடித்தது. பூமியின் நிழலில், தாமிரம் போன்ற நல்ல சிவப்பு நிறத்தில் நிலா காணப்பட்டது. அன்று வானம் தெளிவாக இருந்ததால், வடஅமெரிக்கர்கள் இந்த சந்திர கிரகணத்தை நன்றாக பார்க்க முடிந்தது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை.